Perambalur: Special puja on the full moon day at the Sangupettai Sri Muthumariamman temple!
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மார்கழி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகா தீபம் , சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது. அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முத்துமாரியம்மனை வண்ண மலர்களால், அலங்கரித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் காண்பித்து அம்மனை மக்கள் வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். 19வது வார்டு அன்னதான குழுவினர் அபிஷேகத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்திருந்தனர்.