பெரம்பலூர் ஸ்ரீஅம்மன் குரூப் நிறுவன தலைவர் மனோகரன் இல்ல திருமண விழா

நாளை நடக்கிறது.

schedule
2018-08-22 | 16:06h
update
2026-08-24 | 03:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Sri Amman Group Founder and Chairman Manoharan Family wedding ceremony is tomorrow.

பெரம்பலூர், ஆக.22- பெரம்பலூர் ஸ்ரீஅம்மன் குரூப் நிறுவன தலைவர் மனோகரன் இல்ல திருமண விழா நாளை ஆக.23ம் தேதி திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பிச்சாண்டார் கோவிலில் உள்ள ஸ்ரீ உத்தமர் கோவிலில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பெரம்பலூர் துறைமங்கலம் ஜே.கே மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சியும், விருந்து உபசரிப்பும் நடைபெறுகிறது

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமம் மறைந்த பெரியசாமி உடையார் – சுப்பம்மாள் ஆகியோரின் மகன் வழி பேத்தியும், விஜய கோபாலபுரம் சாமிதுரை உடையார் சரஸ்வதி ஆகியோரது மகள் வழி பேத்தியும், பெரம்பலூர் அம்மன் குரூப் நிறுவன தலைவர் பெ.மனோகரன் – உமாதேவி தம்பதியரின் மகளுமான எம். சரண்யா இவருக்கும்,

அதே, பேரளி கிராமத்தை சேர்ந்த மறைந்த சின்னசாமி உடையார் – நல்லம்மாள் மகன் வழி பேரனும், மறைந்த பெரியசாமி உடையார் – சுப்பம்மாள் மகள் வழி பேரனும், சிதம்பரம் – வசந்தா தம்பதியரின் மகனுமான சி. மணி என்கின்ற சின்னசாமிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி மணி – சரண்யா ஆகியோரது திருமணம் நாளை ஆக.23ஆம் தேதி வியாழக்கிழமை நம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோவில் உள்ள உத்தமர் கோவிலில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்றைய தினம், பெரம்பலூர் துறைமங்கலம் ஜேகே மஹாலில் காலை 11 மணிக்கு மேல் 2 மணிக்குள் நடைபெற உள்ளது.

விழாவில் தமிழக அளவிலான, அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரம்பலூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள், சிறு, குறு வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள், அம்மன் குரூப் நிறுவன ஊழியர்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மன் குரூப் நிறுவனத் தலைவர் மனோகரன் – உமா தேவி தலைமையில் ஸ்ரீஅம்மன் குரூப் ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் எம். சரவணன் – சந்தியா சரவணன், எம். சௌமியா, எம். ஆதிகேசன் மற்றும் மணமகன் வீட்டார் சிதம்பரம் – வசந்தா, ரமேஷ் குமார், ஆனந்தி ரமேஷ்குமார், வெங்கடேசன், ஜெயந்தி வெங்கடேசன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 03:26:56
Privacy-Data & cookie usage: