பெரம்பலூர்: பரவாய் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

schedule
2025-10-07 | 11:38h
update
2025-10-07 | 11:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Stalin’s project camp with you in Paravai and Krishnapuram!

பெரம்பலூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், வெங்கலம், வெண்பாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பரவாய், ஆண்டிக்குரும்பலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெற்றது.

Advertisement

இதில், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை கலெக்டர் ந.மிருணாளினி மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மனு அளிக்க வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தினையும், வருவாய்த்துறை சார்பில், பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை,  பிறப்பிடச் சான்றிதழ்களையும், வேளாண் பொறியியல் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.4,11,600 மதிப்பிலான களை எடுக்கும் இயந்திரங்களையும் மானிய விலையிலும் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 20:45:15
Privacy-Data & cookie usage: