Perambalur: Steps to be taken to renovate the Kottarai Reservoir for the benefit of farmers — Candidate Saranya Pledges!
குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் என்.கே. கிருஷ்ணன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் ஐஜேகே வேட்பாளர் சரண்யா உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சரண்யா அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும், திமுக ஆட்சிய ஏன் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்தும், கொட்டரை நீர்த்தேக்கம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சீரமைத்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க தன்னை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இன்று காலை குரும்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் கொட்டரை ஆதனூர் மதுராகுடிக்காடு சீராநத்தம் இலந்தங்குழி தொண்டப்பாடி, மேல உசேன்நகரம் வேப்பமர காலணி கீழ உசேன்நகரம் அல்லிநகரம், குறிஞ்சிப்பாடி மங்கலம் கீழமாத்தூர் சீதாராமபுரம் சடைக்கன்பட்டி அழகிரிபாளையம்,ம.கோவில் வரிசைப்பட்டி மேலமாத்தூர், தங்கநகரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னாள் துணை சபாநாயகர் ஆ.அருணாச்சலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி, சித்தளி நாகராஜன், குரும்பாளையம் சி.நாகராஜன் உள்பட பாமக, பாஜக, ஐஜேகே கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக, இன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருப்படத்திற்கு வேட்பாளர் சரண்யா மாலை அணித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.