பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை: வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து உறுதி!!

schedule
2026-04-14 | 04:41h
update
2026-04-14 | 04:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Steps to be taken to resolve drinking water issues in the Kunnam constituency—IJK President Ravi Pachamuthu gives assurance while campaigning for candidate Saranya!

குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஐகேகே வேட்பளார் சரண்யாவை ஆதரித்து ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து நேற்று மேலமாத்தூர், புதுவேட்டக்குடி, மற்றும் செந்துறை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தா, அப்போது அவர் பேசியதாவது : பாரிவேந்தர் ஐயா கூறியது.. குன்னம் எனது இதயத்தில் இருக்கிறது. குன்னம் மக்கள் எனது இதயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். பெரம்பலூரிலே அவர் MP-யாக இருந்தாலும், நான் பெரம்பலூர் MP-யை விட இந்த மண்ணுக்கு ஏதாவது செய்வதிலே ஐயாவுக்கும் எனக்கும் ஒரு ஒரு பாசமும், நட்பும் இருக்கிறது, கடமை இருக்கிறது. காரணம் என்னவென்று கேட்டால் ஐயா கட்சி தொடங்கியவுடன் அதிக வாக்குகள் கொடுத்தது இந்த குன்னம் தொகுதி. அதனால்தான் ஐயாவுக்கு குன்னத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் இருக்கிறது.

நீங்கள் எதை கேட்டாலும் செய்ய ஐயா தயாராக உள்ளார்கள். ஐயா மட்டும் இல்லை இன்னைக்கு தேசிய அளவில் மோடியை ஐயாவை பார்க்க முடியும், பேச முடியும், உங்கள் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும், உங்களுக்கு தேவையானவற்றை ஐயாவால் செய்து கொடுக்க முடியும். அதில் நமக்கு எந்த குறையும் இருக்காது. அதே மாதிரி எடப்பாடியார் பார்த்தீங்கன்னா பார்த்தாலே தெரியும் சிரிச்சா போதும் அவர் எவ்வளவு அன்பானவர், எவ்வளவு எளிமையாக பழகக்கூடியவர்.

நம்ம கட்சியோட முதல் கொள்கை என்ன தெரியுமா? ஒரு விவசாய குடிமகன் தமிழ்நாட்டை ஆள வேண்டும். இதை சொன்னது யார்? ஐயா 15 வருஷத்துக்கு முன்னாடி இது நம்ம கட்சி கொள்கையில ஒன்று. அதை வந்து நிறைவேற்றித் தந்தவர் எடப்பாடியார். அதுக்கப்புறம் தான் ரஜினிகாந்த் ஐயா வந்தாங்க, அவங்களும் சொன்னாங்க. ஆனால் இதையெல்லாம் தாண்டி முன்னால படித்தவர் ஒரு தீர்க்கதரிசி, தமிழ்நாட்டை ஒரு விவசாயி ஆளப் போகிறான் என்று சொன்னவர் ஐயா பாரிவேந்தர்.

Advertisement

விவசாய பொருட்களுக்கு நல்ல விலை வேணும், உங்களுக்கு சேமிப்பு கிடங்கு வேணும் அதெல்லாம் நம்ம பண்ணித் தருவோம். அதெல்லாம் திட்டங்கள் எடப்பாடியார் போட்டு இருக்கார். இன்னைக்கு பேசிட்டு இருக்கார் திருச்சியில். இப்ப நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் என்னென்ன திட்டங்கள்னு நீங்க டிவியில் பார்க்கும்போது அத்தனையும் பொன்னான திட்டங்கள். இந்த குன்னம் தொகுதிக்கு குடிநீர் பிரச்சனை இருக்குது, அதே மாதிரி விவசாய பொருட்களுக்கு நல்ல விலை, விலைவாசி வேணும்.

இதை வந்து எப்ப செய்ய முடியும்னா மத்தியிலே மோடி ஆட்சி இருக்கணும், தமிழ்நாட்டுல எடப்பாடியார் ஆட்சி இருக்கணும். நம்ம மறந்துடக்கூடாது. ஏன்னா இன்னைக்கு என்ன நடந்துட்டு இருக்குன்னு பார்த்தீங்கன்னா ஒவ்வொரு பிரச்சனையும் சட்டமன்றத்திலேயோ இல்ல பார்லிமெண்ட்லயோ போய் பேசும்போது பிரச்சனை மட்டும்தான் நடக்குது. மக்களுடைய குறையை யாரும் பேசல. பேசணும் அப்படின்னா இங்க எடப்பாடியார் இருக்கணும், அங்க திரு மோடி அவர்கள் இருக்கணும். ரெண்டு பேரும் சேர்ந்து டபுள் இன்ஜின் சர்க்கார் நடத்தணும். ஏன்னா இந்த இந்தியாவின் வளர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஒரு ஸ்பீட்ல போகணும்.

நமக்கு தமிழ்நாடு முக்கியம், அதே தேசியப்பற்று இந்தியா நல்லா இருக்கணும். அவங்க யார் என்ன பண்ணாலும் ஒன்னா சேர்ந்ததுதான். இப்போ நம்ம தமிழ்நாட்டை பிரிச்சிட்டு வந்து தனியா ஒரு நாடு ஆக்கி ஒரு பார்டர் போட்டு நம்மளால பண்ண முடியுமா? இன்னைக்கு இத்தனை பிரச்சனையை பேசுறாங்க. நம்மளுடைய திமுக என்ன சொல்றாங்க எனக்கு வேண்டாம் நாங்க தமிழ்நாடு தனி தமிழ்நாடு மாதிரி எல்லாத்துலயும் ஒன்றிய அரசுன்னு சொல்றீங்க. அது எப்படி அது தேசிய அரசை ஒன்றிய அரசுன்னு சொல்றீங்க?

ஆனால் நமக்கு தேவை பாதுகாப்பு. உங்களை நீங்க வேணா இன்னொன்னு சொல்லுங்க உங்களுக்கு நான் சொல்லித்தர்றேன். என்ன சொல்லணும்னா ‘இந்தியாவை தமிழ்நாடு ஆளும்’. ஏன் நீங்க குறுகி நிக்கிறீங்க? ஐயா பாரிவேந்தர் அதான் சொல்றார். உங்களுடைய குரல் எங்க ஒலிக்கணும்? அங்க ஒலிக்கணும் டெல்லியில். டெல்லி வரைக்கும் போகக்கூடிய தில்லு யாருக்கு இருக்கு? தமிழனுக்கு இருக்கு. அதற்கு நீங்க என்ன பண்ணணுமோ நீங்க பண்ணுங்க.

ஒவ்வொரு ஊரா குன்னத்தை தனி ஒரு மாநிலமாக்கி இதுக்கு ஒரு CM-அ போட முடியுமா? போட்டா நல்லா இருக்குமா? நல்லா இருக்காது. நம்முடைய பார்வை தேசிய பார்வையா இருக்கணும். தேசிய பார்வையில தான் இன்னைக்கு எத்தனை ஆயிரம் கோடி… அன்னைக்கு மோடி மீட்டிங்ல சொல்றார், இதுவரைக்கும் கொடுத்திருக்கிறது 14 லட்சம் கோடி கொடுத்திருக்கேன்றார்.

அரசாங்கம் என்றது என்ன? அரசாங்கத்துக்கு எது தேவை? மக்களுக்கு என்ன தேவை? முதல்ல நமக்கு தேவை குடிநீர், சாலை போக்குவரத்து இருந்தாலே ஆட்டோமேட்டிக்கா நமக்கு நல்லா இருக்கும். விவசாய விலைகளுக்கு நல்ல விலை பொருள் கொடுக்கணும். நமக்கு தேவையான கல்வி, சுகாதாரம், மருத்துவம் இதெல்லாம் கொடுத்தாங்கனாலே நம்மளுடைய மூளை நல்லா வேலை செய்யும். அங்கங்க சாராய கடையை திறந்து வச்சு நம்ம மூளையை மழுங்கடிச்சு நிறைய சரக்கு குடிச்சு குடிச்சு நம்ம பிரைன் வேலை செய்யாது.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து மாதிரி ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து என்றார். 2000 ரூபாய் வந்து மாதத்தொகை குடும்பத் தலைவிக்கு கொடுக்கப்படும் என்றார். அம்மா வீடு கட்டும் திட்டத்துக்கு பணம் கொடுக்கவும், அதேபோல நரேந்திர மோடி ஐயா அவர்களும் சொல்றாங்க… 100 நாள் வேலைத் திட்டம் வந்து பார்த்தீங்கன்னா 150 நாளா உயர்த்தித் தரப்படும்ன்றார்.”

ஸ்கூட்டர் திட்டத்துல 25,000 மானியம் கொடுக்குறேன்னு சொல்றாங்க, இந்த மாதிரி பல திட்டங்கள் அவர் புத்தகமே போட்டுக் கொடுத்திருக்காரு. அதெல்லாம் நமக்கு இருந்தாலும், ஐயா பாரிவேந்தரின் ஆசி பெற்ற இந்த குன்னம் தொகுதி மக்களுக்கு சின்னம் இரட்டை இலை.

நமது சின்னம் இரட்டை இலை! நமது சின்னம் இரட்டை இலை! பெரிய வாக்கு வித்தியாசத்துல திருமதி. சரண்யா அன்பழகனுக்கு நீங்க எல்லாம் வாக்கு போட்டு ஜெயிக்க வைக்கணும்.

நீங்க ஜெயிக்க வச்சிருவீங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு, அதுல எந்த குறையுமில்ல. ஆனா அந்த வாக்கு வித்தியாசம்ன்றது ஜாஸ்தியா இருக்கணும். அன்னைக்கே எங்களுக்கு கொடுத்தவங்க, இன்னைக்கும் கொடுப்பீங்கன்ற நம்பிக்கையில உங்களையெல்லாம் தாழ்மையோடு கேட்டுக்கிறேன்.
உங்களை சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி, நன்றி வணக்கம்! என பேசினார்.

முன்னதாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சிறப்பான வரவேற்பு தலைவர் ரவிபச்சமுத்துவிற்கு அளிக்கப்பட்டது. அதிமுக, பாமக, பாஜக, த .மா.கா, அமமுக, மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை, குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பழமலைநாதபுரம், என்.குடிக்காடு, நமங்குணம், சொக்கநாதபுரம், நக்கம்பாடி, நின்னியூர், உடையான் குடிக்காடு, கீழமாளிகை ராசபாளையம், மத்துமடக்கி, நாகல்குழி, செம்மண் பள்ளம், வீராக்கன், பிலாக்குறிச்சி, வடக்கு இரும்புலிக்குறிச்சி, குன்னன் தொண்டி குமிழியம், பரணம், கழுமங்கலம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் சரண்யாவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து ஆங்காங்கே சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 05:47:13
Privacy-Data & cookie usage: