பெரம்பலூர்: ஒயின்ஷாப்பில் MRPயை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து ஸ்டிரைக்; அரசுக்கு கோடிக்கணக்கில் நட்டம்!

schedule
2026-09-04 | 15:56h
update
2026-09-04 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Strike held to protest against action taken on those selling liquor above MRP; government suffers losses running into crores.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் அரசு, 165 மது சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. வணிக நேர்மைக்கு எதிராக [(Unfair) Untrade Business] மதுபானங்களை MRP-யை விட அதிக விலைக்கு வாங்க வருவோர்களிடம் பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 20 வரை விற்று வாங்கி பழகிய ஊழியர்களுக்கு தற்போது அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு செய்து கொடுத்தும் பாட்டிலுக்கு 10 அல்லது 20 ரூபாய் வாங்குவதை கைவிட முடியாமலும், அரசே கடையின் அனைத்து செலவினங்களை ஏற்க வேண்டும் எனவும் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

ஆனால், நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் சுமார் 500 மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக வைத்துக் கொண்டால், பாட்டிலுக்கு 10 ரூபாய் MRP-யை விட கூடுதலாக வசூலிக்கும் போது ரூ. 5ஆயிரம் உபரி பணமாக கிட்டுகிறது. இது அரசின் கணக்கில் வராது. இதை ஊழியர்கள் உள்ளிட்ட அந்த துறையினர் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த பாட்டிலுக்கு 10 ரூபாய் தேர்தல் பிரச்சாரங்களிலும், சட்ட மன்றத்திலும், கூட பேசுப் பொருளானது. இந்நிலையில், வணிக சட்டங்களுக்கு எதிராக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை நீக்கிவிட்டு அரசு புதிய ஊழியர்களை நியமித்து அரசின் வருவாய் இழப்பையும், ஊழலையும், மதுப்பிரியர்கள் சுரண்டப்படுவதையும் தடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் விற்கும் விலையையே தமிழகத்தில் விற்கவேண்டும். கள் மற்றும் பாக்கட் சாரயத்திற்கு மீண்டும் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக்கை சேர்ந்த சூப்பர்வைசர் மற்றும் சேல்ஸ்மேன்கள் டாஸ்மாக் பாட்டிலுக்கு MRP விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதை அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் , டாஸ்மாக் கடையில் ஏற்படும் செலவினங்களை சரி செய்து தர கோரி வலியுறுத்தியும் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் வைத்த கோரிக்கைகள்: காலி பாட்டில் திரும்பப்பெறும் நபருக்கு சம்பளம், ஸ்டிக்கர் ஒட்டுபவருக்கு சம்பளம், மதுபான கிடங்குகளில் இருந்து வரும் மதுபானங்களை கடையில் இறக்கி வைப்பதற்கு கூலி, கடையில் உடையும் மது பாட்டில்களுக்கு சேதாரத்தை அரசு ஏற்று கொள்ள வேண்டும், அட்டைப்பெட்டியில் ஏற்படும் சேதாரம் மற்றும் கழிவுகளுக்கு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், வங்கிக்கு சென்று பணம் செலுத்துவதற்கு பயணப்படி கொடுக்க வேண்டும், இரவு கடையை பார்த்துக் கொள்ளும் பாதுகாவலருக்கு சம்பளம், சில்லரை தட்டுப்பாடு காரணமாக கமிஷன் கொடுத்து வாங்கும் கமிஷன் தொகையை வழங்கவும், காலி பாட்டில் சேகரித்து வைப்பதற்கு இட வாடகை வழங்க வேண்டும், கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகனை முன் வைத்தனர்.

மதுப்பிரியர்களை சுரண்டும் டாஸ்மாக் கடைகளை அரசு தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, பள்ளிகளை கையில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 16:27:23
Privacy-Data & cookie usage: