பெரம்பலூர்: மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை; கலெக்டர் தகவல்!

schedule
2026-05-22 | 09:47h
update
2026-05-22 | 09:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Student Admissions Open at District Government Music School; Collector Announces.

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .இப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

இப்பள்ளியில் 13 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாதசுரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய பிரிகளில் சேர்ந்து பயில தமிழ் எழுதபடிக்கத் தெரிந்தால்போதுமானது. இதர பாட பிரிவுகளில் சேருவதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இசைப்பள்ளிலேயே 10 ஆம் வகுப்பு சேரலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இசைப்பள்ளிலேயே 12 ஆம் வகுப்பு சேரலாம். பள்ளி கல்வி துறையுடன் இணைந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப்பள்ளியில் மூன்றாண்டுகள் படித்து முடித்த மாணவர்கள் இசைக்கல்லூரிகளில் நேரடியாக பட்டயப்படிப்பில் மூன்றாம் ஆண்டுசேரலாம். இப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவியருக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000-/- வழங்கப்படுகிறது .

அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை பெறலாம். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ350-/- மற்றும் பள்ளி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4வது குறுக்குத் தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04328-275466 மற்றும் 9443377570 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 08:11:44
Privacy-Data & cookie usage: