Perambalur: SPL election at Almighty Vidyalaya Public School, Siruvachur; voting conducted using voting machines.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவன் மற்றும் துணை மாணவர் தலைவன் தேர்தலுக்கான வாக்கெடுப்பு பள்ளியின் முனைவர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் சாரதா, துணை முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் மேகநாதன் சிறப்புரையாற்றி, மாணவர்களின் வாக்கெடுப்பினை தொடக்கி வைத்தார்.
மாணவர்கள், மாணவியர்கள் என இரு பிரிவாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். வரிசையாக செல்லவும், பெயர் குறிப்பிடவும், வாக்களித்த பின்னர் இடது கை ஆள்காட்டி விரலில் மையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்களிக்க ஓட்டிங் சிம்முலேட்டர் மெசின் மூலம் மாணவர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தேர்தல் முறையாக நடந்த பின்னர், அதிக வாக்குகள் பெற்றவர் பள்ளி மாணவர் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அறிவிப்பு செய்யப்பபட்டனர்.