பெரம்பலூர்: அரசு கல்லூரில் UG படிக்க மாணவர்கள் www.tngasa.in -ல் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-05-10 | 13:14h
update
2025-05-10 | 13:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Students can apply for UG studies at government colleges at www.tngasa.in; Collector’s information!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் மாணவ,மாணவிகள் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்கு ஏதுவாக TNGASA என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்ப பதிவினை 07.05.2025 அன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதில் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், இளங்கலை அறிவியலில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல், பி.பி.ஏ ஆகிய பாடப்பிரிவுகளும்,

வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம், வரலாறு, இளங்கலை அறிவியலில் இயற்பியல், வேதியியல், , கணிதவியல், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பி.காம், பி.பி.ஏ ஆகிய பாடப்பிரிவுகளும்,

பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம், ஆங்கிலம், சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாடு, இளங்கலை அறிவியலில் இயற்பியல், கணிதவியல், வேதியியல், உயிரியியல், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பயோ டெக்னாலஜி, இளங்கலை சமூகப் பணி ஆகிய பாடப்பிரிவுகளும்,

கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், பி.காம், இளங்கலையில் பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் பயில விரும்பும் மாணவ,மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 ஆகும். எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 ஆகும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை டெபிட் கார்டு (Debit card) / கிரெடிட் கார்டு (Credit card) / நெட் பேங்கிங் ( Net banking) / யு பி ஐ (UPI) மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

மேலும், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரி கல்வி இயக்கத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை 044 – 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 06:34:30
Privacy-Data & cookie usage: