பெரம்பலூர்: விளையாட்டு விடுதிகளில் சேர ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-24 | 02:43h
update
2025-04-24 | 02:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Students interested in joining sports hostels can apply; Collector’s information!

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 18.04.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7-ஆம், 8-ஆம், 9-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள் 05.05.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 95140 00777 எண்ணிலும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பெரம்பலூர் 74017 03516 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்றுகொள்ளலாம். 

விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் வருகின்ற 07.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் ஆண்களுக்கும், 08.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, ஆகிய விளையாட்டுகளும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு மாவட்ட அளவிலான தேர்வுகள் புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கம் பெரம்பலூரில் நடத்தப்படவுள்ளது. இப்ப போட்டியில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான தேர்வின் போது மாணவ, மாணவியர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளியில் பயிலுவதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் (ID card, Bonifide) சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதிபெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் 12.05.2025 அன்று பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு வாள் விளையாட்டு, ஜுடோவும், பள்ளி மாணவர்களுக்கு குத்துச் சண்டை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையிலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பளு தூக்குதல் மற்றும் மாணவர்களுக்கு வுஷு தேர்வுகள் அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரிலும், நீச்சல் மாணவ, மாணவியர்களுக்கு AGB Complex, வேளச்சேரி, சென்னையிலும், குத்துச்சண்டை மாணவியர்கள், ஸ்குவாஷ் மாணவர்களுக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையிலும்,
மல்யுத்தம் மாணவர்கள் டேக்வாண்டோ மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரிலும், மல்லர்கம்பம் மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் விழுப்புரத்திலும், தேர்வுகள் எதிர்வரும் 12.05.2025 அன்று காலை 07.00 மணி முதல் நடைபெறவுள்ளது. கைப்பந்து பள்ளி மாணவருக்கு 12.05.2025 மற்றும் மாணவியர்களுக்கு 13.05.2025 அன்று அண்ணா விளையாட்டரங்கம், திருச்சியிலும் காலை 07.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

மேலும், தனி நபர்கள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும்,

பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதங்கங்கள் பெற்றவர்களும் மற்றும் கலந்து கொண்டவர்களும் மாவட்ட, மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் தேர்வுக்கு முன்னுரிமை தகுதியான ஆவார்கள். எனவே, 2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாணவ,மாணவியர்கள் www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெற கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 16:02:19
Privacy-Data & cookie usage: