பெரம்பலூர்: கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கலெக்டர் காலதாமதத்தால், விழிப்புணர்வு பேரணிக்கு வந்த மாணவர்கள் கால் வலிக்க நின்று அசந்து போயினர்! உங்க வீட்டு குழந்தைகளை மணிக்கணிக்கில் நிக்க வைப்பீர்களா? என பொதுமக்கள் கேள்வி?

schedule
2026-06-24 | 07:59h
update
2026-06-24 | 08:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Students who arrived for an awareness rally were left exhausted and footsore due to the delay caused by Education Minister Rajmohan and the District Collector. Members of the public questioned, “Would you make the children in your own homes stand for hours like this?”

பெரம்பலூர் பாலக்கரையில் இன்று காலை 9.15 மணிக்கு சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் பெரம்பலுர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் தொடங்கி வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் விடுதி மாணவ – மாணவியர்கள் காலை 8.15 மணி முதல் வந்து வரிசையில் காத்திருக்க தொடங்கினர். ஆனால், காலை 9.15 மணி கடந்தும் நிகழ்ச்சியை தொடங்கப்பட வில்லை, கலெக்டர் வருவார் என கல்வி கற்க பள்ளிகூடத்திற்கு போகாமகல் பாலக்கரை அருகே சுமார் 10.40 மணி வரை காத்திருந்தனர். பின்னர், தான் அங்கிருப்பவர்களுக்கு தெரிந்தது, கலெக்டர் ஷரண்யா உடன் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என தெரிந்தது. பின்னர், சுமார் 10.45 மணி அளவில் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து தொடங்கி வைக்க பேரணி புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது. பின்னர் 11 மணி அளவில் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

Advertisement

வயது வந்த பெரியவர்கள் மது அருந்துவதற்கு குறைந்த பதின்ம வயது உடைய மாணவர்களை சுமார் 3 மணி சாலையில் வாட்டி வதைப்பது என்ன நியாயம்?, ஊரெல்லாம் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ள அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், மதுபான உற்பத்தி செய்யும் ஆலை அதிபர்களாக இருக்கும் அரசியல் வாதிகள் மாறாமல், மாணவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் மணிக்கணிக்கில் சாலையில் காத்திருக்கு வைப்பது என்ன நியாயம்? என்றும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், உங்கள் வீட்டு குழந்தைகளை இப்படி மணிக்கணிக்கில் புழுதி பறக்கும் சாலையில் காக்க வைப்பீர்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய காலநேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பேரணியில் எம்.எல்.ஏ சிவக்குமார் உள்பட கல்வி, காவல், வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 08:07:02
Privacy-Data & cookie usage: