பெரம்பலூர்: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களுக்கு மானியம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-11-14 | 12:03h
update
2025-11-14 | 12:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Subsidy for Christians on pilgrimage to Jerusalem; Collector informs!

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

மேலும், விண்ணப்பத்துடன் கடவுச்சீட்டு நகல் மற்றும் புனிதப் பயணத்தின் போது இஸ்ரேல் / ஜோர்டான் / எகிப்து குடியேற்று முத்திரைகள் பதிக்கப்பட்ட பக்கங்களின் நகல்கள். விசா நகல், இருப்பிடத்திலிருந்து புனிதப் பயணம் சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பிய வரை பயணித்த அனைத்து பயணசீட்டுகள், பேருந்து/ரயில்/விமான பயணச் சீட்டுகள் மற்றும் விமான பயணங்களுக்கான Boarding Passes., புனிதப் பயணத் திட்டம். புனிதப் பயணம் நிறைவுச் சான்றிதழ் (படிவத்தில்), பயணம் மேற்கொண்ட அனைவரின் ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல் , விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்கள்,வருமான சான்றிதழ், விண்ணப்பதாரர் கிறித்துவர் / கன்னியாஸ்திரி / அருட்சகோதரி என்பதற்கு ஆதாராமாக ஒரு சான்று இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.02.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600005, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் மிருணாளனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 20:05:55
Privacy-Data & cookie usage: