தேர்தல் தேதி அறிவித்த பின்பும் அலுவலக கதவை மூடிக்கொண்டு நலத்திட்ட உதவி வழங்கல்

schedule
2016-03-04 | 14:24h
update
2026-04-23 | 05:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின் அவசர அவசரமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் தங்கம் வழங்கப்பட்டதால் பெரம்பலுாரில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில் பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 5.15 மணிக்கு அலுவலக கதவுகளை பூட்டிக்கொண்டு, தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஏழை பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

கடந்த ஜன., 11ம் தேதி 944 பேர்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் காயின் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 1ம் தேதி வரை இந்த பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இதற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதே காரணம் என அறிந்த கலெக்டர் நந்தகுமார், சமூக நலத்துறை இயக்குனருக்கு தகவல் கொடுத்ததின்படி விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் லலிதா பெரம்பலுாருக்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஜன., 11ம் தேதி 944 காயின் பெற்ற பயனாளிகளுக்கு அவசர அவசரமாக இன்று முன்தினம் காலை முதல் செக் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தேர்தல் இன்று மாலை 3 மணியளவில் அறிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் இன்று மாலை 5.30 மணி வரை அலுவலக கதவுகளை பூட்டிக்கொண்டு பயனாளிகளுக்கு செக் வழங்கிய மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) லலிதாவின் செயல்பாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 05:46:00
Privacy-Data & cookie usage: