Perambalur surrounding areas Power Supply Break to 2 Hours on tomorrow: TNEB declaration
பெரம்பலூர் நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.17) காலை 9.00 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகரப் பகுதிகளான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, நான்கு சாலை பகுதி, மின்நகர், துறைமங்கலம் மற்றும்
கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், செங்குணம், பாலம்பாடி, அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, கே.புதூர், எளம்பலூர் – சமத்துவபுரம், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் காலை 11 மணி வரை சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மேலும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சாரம் வினியோகிக்ககப்படும், என அதில் தெரிவித்துள்ளார்.