Perambalur: T.R. Sivasankar received birthday wishes from Deputy Chief Minister Udhayanidhi Stalin!
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட திமுக இணைஞரணி அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் வாழ்த்து பெற்றார். அப்போது துணை முதலமைச்சருக்கு, சால்வை அணிவித்து புத்தகம் வழங்கினார். நினைவுப் பரிசாக வள்ளுவர் கோட்ட தேர் சின்னத்தையும் வழங்கி வாழ்த்து பெற்றார். பிறந்த நாள் கொண்டாடும் டி.ஆர். சிவசங்கருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், கூட்டணி கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.