Perambalur: TAHDCO provides training to SC & ST people to work at the international airport!
தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின்க் ரூவ் (Cabin Crew) , விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி (Air Cargo Introductory+ DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services+ Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி, (Foundation in Travel and Tourism) போன்ற பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த 18 முதல் 23 வயது இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், இப்பயிற்சிக்கான கால அளவு ஆறுமாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும்பட்சத்தில் IATA-International Air Transport Association-Canada மூலம் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம் எனவும், தற்போது வரை தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களான Indigo, Air India, Menzies,Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours,Alhind Tours & Money Exchange போன்ற விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.