பெரம்பலூர்: தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-11 | 14:47h
update
2026-07-11 | 14:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Tamil Nadu Day celebration; essay and speech competitions for school students; Collector’s announcement!

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் சூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத் துறை அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திட கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைபோட்டி தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை என்ற தலைபைபிலும் மற்றும் பேச்சுப் போட்டிகள் நான் விரும்பும் தமிழ்நாடு, அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு, இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்புகளிலும் 14.07.2026 அன்று பெரம்பலூர் மாவட்டம் பாரத சாரண, சாரணியப் பயிற்சி மையத்தில் (தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அருகில்) நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.7000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.5000/-ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

இப்போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பெறும் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குலுக்கல் முறையில் போட்டிக்கான தலைப்பு வழங்கப்படும். மேலும், போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியிலோ அல்லது செல்பேசி 9043187510 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 15:21:58
Privacy-Data & cookie usage: