பெரம்பலூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஸ்மார்ட் மீட்டர் பாதிப்பு குறித்து பிரச்சார இயக்கம்!

schedule
2025-04-19 | 20:34h
update
2025-04-19 | 20:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Tamil Nadu Electricity Employees Central Organization launches campaign on smart meter vulnerability!

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஏப்ரல் 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக நடந்தது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில், துவங்கி 4 ரோடு, தேரடி வீதி, காந்தி சிலை ஆகிய இடங்களில் பிரச்சார இயக்கம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடந்தது. இந்திய தொழிற்சங்க மையம் மாநிலச் செயலாளர் தோழர் எம் .சிவாஜி அவர்கள் பிரச்சார இயக்கத்தை துவங்கி வைத்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பு மாவட்ட நிர்வாகி எம். கருணாநிதி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மணி சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்டக் குழு தோழர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 18:10:01
Privacy-Data & cookie usage: