Perambalur: Tamil Nadu Farmers’ Association submits petition to the Collector seeking action to issue asset-liability certificates.
பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யாவிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாய சங்க பிரதிநிதிகள் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது:
நடப்பு பருவத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கிராம கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெற வங்கியில் அணுகினால் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஆஸ்தி பொறுப்பு சான்றிதழ், அடங்கல் வாங்கி வந்து கொடுக்குமாறு வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ்களை கேட்டால் அவர்கள் அதை வழங்க மறுப்பதாகவும், இதனால், தற்பொழுது மாவட்டம் முழுவதும் பயிர்கடன் பெற்று விவசாயிகள்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த காலங்களை போல கிராம நிர்வாக அலுவலர்கள் ஆஸ்தி பொறுப்பு சான்றிதழ் வழங்கியதைப் போன்று இந்த ஆண்டிற்கும் வழங்கிட எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் தெரிவிப்பதன் அடிப்படையில் அடங்கல் வழங்கிட வேண்டும். பயிர் சாகுபடி செய்த பின்புதான் அடங்கல் வழங்குவோம் எனகிராம நிர்வாக அலுவார்கள் தெரிவித்து அடங்கள் வழங்க மறுப்பதால் விவசாயிகள் கடன் பெறுவதிலும், அடியுரம் இடுவதிலும் நடைமுறை சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட பெரம்பலூர் கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.