பெரம்பலூர்: தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகள்; கலெக்டர் தகவல்!

schedule
2025-08-27 | 12:44h
update
2025-08-27 | 12:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Tamil Nadu government’s tourism awards; Collector’s information!

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத்துறையால், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு 17 வகைப்பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத் தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா அமைப்பு MICE Organizer, சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் சுற்றுலாவினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய தகுதிகள் உள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேலும், இந்த வருடம் 2024-25ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 15.09.2025-க்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தொழில்முனைவோர் அனைவரும் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை விரைந்து இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 16:33:32
Privacy-Data & cookie usage: