பெரம்பலூர்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம்; எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தலைமையில் நடந்தது!

schedule
2025-11-24 | 15:04h
update
2025-11-24 | 15:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Tamil Nadu State Minorities Special Committee Study Meeting; Held under the chairmanship of MLA Inigo Irudayaraj!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், தகுதி வாய்ந்த சிறுபான்மையின மக்களுக்கு அரசு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தம், சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல சிறப்புக்குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் த.இனிகோ இருதயராஜ் தலைமையில், கலெக்டர் ந.மிருணாளினி, சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் சிறுபான்மையின மக்களின் நலன் சார்ந்து வழங்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு சிறுபான்மை அமைப்புகள் இன்று வழங்கிய கோரிக்கை மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சிறுபான்மை நல சிறப்புக்குழு உறுப்பினர் / திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அறிவுறுத்திய அவர் தெரிவித்ததாவது:

சிறுபான்மையின மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி, பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் சிறுபான்மையின மக்களுக்கான திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி உள்ள அனைத்து சிறுபான்மையினர் மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்திடவும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆய்வு செய்யவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மகளிருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி நிறைவு செய்துள்ள 30 சிறுபான்மையினர் மகளிர்களுக்கு  ரூ.1.92 லட்சம் மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்களை சிறுபான்மையினர் அவர் வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், தமிழ்நாடு கிறித்துவ உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் ஜான்பிரான்சிஸ் எபினேசர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் பலர் மற்றும் கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரெனோ பாஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 02:25:29
Privacy-Data & cookie usage: