Perambalur: Tamil Nationalist Resurgence Conference in Ulundurpet; VCK members distribute leaflets and invite the public.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளான ஆக.17 நாளை உளுந்தூர்பேட்டையில் தமிழ்தேசிய எழுச்சி மாநாடு நடக்கிறது. பொது மக்களை அழைக்கும் வகையில் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணைச் அம்பேத் கோகுல் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டின் துண்டறிக்கையை விநியோகிக்க கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு அழைப்பாளர்களாகலந்து கொண்டு துண்டறிக்கை விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க. சண்முகசுந்தரம், இடி முழக்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாக்கியராஜ், மவிஇ மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இ.எ.பா மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள், பெரம்பலூர் மேற்கு நகர செயலாளர் தங்க இளவரசன், மாநில செயலாளர் வீர செங்கோலன் கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் ரத்தினவேல், மண்டல துணை செயலாளர் லெனின், மு மா கா மாநில செயலாளர் உதயகுமார், அரணாரை சபரீசன், மவிஇ மாநில துணைச் செயலாளர் செல்வம்பாள், மாநில செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலாளர் வடிவேல் பழனி முத்து, இளையராஜா, சாக்கிய வருணன் , மற்றும் முற்போக்கு மாணவர் கழகத்தை சேர்ந்த ரகுநாத், ஜீவா பழனிபாரதி , லோகு, ரவி சங்கர், ராஜ்குமார், திருமா, பிரவீன்குமார், சின்ராசு, நிஷாந், பிரதீப், மாதவன், மாறன், கோபி, மாவீரன், காமேஷ், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.