Perambalur: Tea shop gas cylinder fire and explosion – one more young man dies!
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே டீக்கடை நடத்தி வந்தவர் அருணாச்சலம் (40), இவரது டீக்கடையில் கடந்த ஆக. 11ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ ஜுவாலையில் சுமார் 16 பேர் காயமடைந்தனர். மேலும், 17 பைக்குகள் சேதமாகின. கடைக்கு டீ குடிக்க வந்த பொம்மனப்பாடியை டிரைவர் மணிகண்டன் (40) விபத்தில் சிக்கி தீக்காயம் ஏற்படடு திருச்சியில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்த நிலையில், திருச்சியில் இந்த தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த அந்த கடையின் டீ மாஸ்டரான, பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (32) இன்று காலை 11 மணி அளவில் உயிரிழந்தார். மேலும், தீக்காயம் அடைந்த இன்னும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.