பெரம்பலூர்: ஆசிரியர் தீபா கொலை வழக்கு; ஆசிரியர் வெங்கடேசனை போலீஸ் கஸ்டடி எடுத்தது!

schedule
2024-02-16 | 12:06h
update
2024-02-16 | 12:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Teacher Deepa murder case; Teacher Venkatesan taken into police custody!

File Copy

பெரம்பலூர் அருகே நிகழ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தீபா கொலை வழக்கு: கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சக ஆசிரியர் வெங்கடேசனை விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் கஷ்டடி கேட்டு போலீசார் மனு செய்து அவரை கஸ்டடியில் எடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே முருக்கன்குடி வனப்பகுதியில் கடந்த 2023 நவம்பர் மாதம் 15ம் தேதி நிகழ்ந்த வி.களத்தூர் அரசுப்பள்ளி ஆசிரியை தீபா கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 10ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலுள்ள சக ஆசிரியர் வெங்கடேசனை விசாரிக்க வேண்டுமென மூன்று நாட்கள் போலீஸ் கஷ்டடி கேட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றத்தில் வி.களத்தூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

Advertisement

போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆசிரியர் வெங்கடேசனுக்கு 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறையில் சமர்ப்பித்த வி.களத்தூர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசனை பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட போதே, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெங்கடேசன் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 09:28:21
Privacy-Data & cookie usage: