பெரம்பலூர்: வெப்பம் 101 °F பதிவானது! சனிக்கிழமை வரை படிப்படியாக அதிகரிக்கும்!! வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடக்கம்!!

schedule
2025-04-22 | 15:59h
update
2025-04-22 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Temperature recorded at 101 °F! It will gradually increase till Saturday!! People are stuck at home due to the impact of the heat!!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் இன்று 101 °F தாண்டியது. இந்த வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலைகளில் போக்குவரத்து மதியம் நேரங்களில் குறைந்தது. இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அதிகாித்தது. நாளையும் அடுத்த நாட்களிலும், சனிக்கிழமை வரை வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை நிலவரங்கள் தகவல்களை தெரிவித்துள்ளன.

Advertisement

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் உக்கிரம் அடைந்துள்ளதால், திறந்த வெளியில் பணிபுரிவோர்கள், இன்ஜின் மற்றும் சாலை உள்ளிட்ட சமையல் மாஸ்டர்கள் பெரும் அவஸ்தை அடைந்து வருகின்றனர். வெயிலை தணிக்க ராஜா ஸ்டோர் போல பலர் நீர் மோர் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் ஏழை எளியவர்களுக்கு தாகம் தணிக்கவும், வெப்பத்தால், வெயிலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்யவும், பிரதிபலன் பாராமல் உதவி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 03:58:11
Privacy-Data & cookie usage: