Perambalur: Temple Hundial opened at the Murugan temple in Chettikulam; Rs. 12,12,793 in cash, along with gold and silver, was recovered!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. ஐயப்பா சேவா சங்க தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணப்பட்டது. ரூ. 12.12.793 ரொக்கமும், 3..060மி. கிராம் தங்கமும், 190.00 கிராம் வெள்ளியும் கிடைத்தன. இவை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.