பெரம்பலூர்: ஆதிதிராவிடர் நலத் துறையில் தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி: கலெக்டர் தகவல்!

schedule
2024-06-26 | 17:15h
update
2024-06-26 | 17:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Perambalur: Temporary Post Graduate Teacher Job in Adi Dravidar Welfare Department: Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மூன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் [1.பொருளியியல் (Economics), 2. வரலாறு (History), 3.கணிதவியல் (Mathematics)] காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப் பபடிவம் 27.06.2024 முதல் 05.07.2024 பிற்பகல் 02.00 மணி வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் 621212 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
Advertisement

மேற்கண்ட காலிப்பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.,) மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை 27.06.2024 முதல் 05.07.2024 பிற்பகல் 04.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்கள் பதவிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TRB) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை தகுதி பெற்ற பணி நாடுநர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 00:25:41
Privacy-Data & cookie usage: