பெரம்பலூர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; குழந்தைகளுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ மோதிரங்களை வழங்கினர்!

schedule
2026-09-28 | 16:46h
update
2026-09-28 | 16:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: ‘Thai Maman’ (Maternal Uncle) Gold Ring Scheme; Collector and MLA presented rings to children.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தை அடுத்து, பெரம்பலூரில், கலெக்டர் ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் எம்.எல்.ஏ கி.சிவக்குமார் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 22.06.2026 முதல் ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் பிரசவித்துள்ள தகுதியான தாய்மார்களுக்கு நிலுவையில் உள்ள தங்க மோதிரங்கள், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெரம்பலூர் நகரப்பகுதியை சேர்ந்த 64 பயனாளிகளுக்கு 29.09.2026, 30.09.2026, 01.10.2026 ஆகிய நாட்களில் மாலையிலும், பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள 201 பயனாளிகளுக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 01.10.2026, 03.10.2026, 05.10.2026, 06.10.2026 மற்றும் 07.10.2026 ஆகிய நாட்களில் மாலையிலும், ஆலத்தூர் வட்டாரத்திலுள்ள 175 பயனாளிகளுக்கும், 29.09.2026, 03.10..2026, 07.10.2026, மற்றும் 10.10.2026 ஆகிய நாட்களில் காலையிலும், வேப்பூர் வட்டாரத்திலுள்ள 271 பயனாளிகளுக்கும், 30.09.2026, 05.10.2026, 08.10.2026 09.10.2026, 10.10.2026 மற்றும் 12.10.2026 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலையிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள 250 பயனாளிகளுக்கும், 01.10.2026, 06.10.2026, 08.10.2026, 09.10.2026 மற்றம் 12.10.2026 வரையுள்ள நாட்களில் காலை மற்றும் மாலை யிலும் தங்க மோதிரம் வழங்கப்படும். ஆக மொத்தம் 961 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க மோதிரம் காலை 10.00 மணி மற்றும் மதியம் 2.00 மணி என இரு நேரங்களில் வழங்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நாள்தோறும் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டுமே மோதிரம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்தப் பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். எனவே, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், 8754717681 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், தங்களுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://perambalur.nic.in/ என்ற வலைத்தளத்திலும் கண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜசெல்வம், மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, ஆர்.டி.ஓ அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.09.2026 - 17:17:23
Privacy-Data & cookie usage: