Perambalur: “Thanks to the welfare schemes implemented by the Chief Minister of Tamil Nadu, a massive wave of support is sweeping in his favor today,” stated Minister Sivasankar in an interview following the filing of his nomination papers.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று திமுக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணியினர் உடனிருந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
செய்தியாளர்: ஐந்தாவது முறை போட்டியிடுவதற்கும், அதில் குன்னம் தொகுதியிலிருந்து மூன்றாவது முறை போட்டியிடுவதற்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு…
வேட்பாளர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி அவர்கள் இந்த அரும்பெரும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, பிற்படுத்தப்பட்ட பகுதியான இந்தப் பகுதிக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அமைச்சர் பதவியை வழங்கினார்கள். அதன் மூலமாக குன்னம் தொகுதி இன்றைக்கு ஒரு மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய நலத்திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் சென்று சேர்ந்திருக்கிறது. எனவே அவருக்கு இன்றைக்கு ஒரு மாபெரும் ஆதரவு அலை வீசுகிறது. அதேபோல மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இன்றைக்கு இணைந்திருக்கின்ற கூட்டணிக் கட்சிகள் வலுவோடு
மிகச் சிறப்பாக கூட்டணிக்கான பணியை ஆற்றி வருகின்றன. எனவே கூட்டணிக் கட்சிகளுடைய துணையோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய சாதனைகளோடு, குன்னம் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற பல்வேறு சாதனைகள் மூலமாக மகத்தான வெற்றியை குன்னம் தொகுதி மக்கள் அளிப்பார்கள் என்ற உறுதியோடு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன்.
செய்தியாளர்: இப்ப ஏதாவது புதிய திட்டங்கள் ஏதாவது சொல்ல வந்திருக்கீங்களா? அதாவது திமுக சொன்னதை இல்லாம நீங்க தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டங்கள் ஏதாவது அறிவிப்பு உள்ளதா?
வேட்பாளர்: தொகுதியை பொறுத்தவரை முழுவதும் விவசாயிகள் நிறைந்த தொகுதி. குறிப்பாக மக்காச்சோளம் விளைவிக்கின்ற விவசாயிகள் நிரம்பிய பகுதி. எனவே அவர்களுக்காக ஏற்கனவே அரசு மூலமாக சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக மக்காச்சோளத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அந்தப் பணிகளைச் செய்வதற்கு நம்முடைய பகுதி விவசாயிகளுக்கு ஒரு ஆராய்ச்சி வசதி, அவர்களுக்கான ஆலோசனை வசதி போன்றவற்றை வழங்குவதற்கான ஒரு நிறுவனமாக இந்தப் பகுதியில் அமைவதற்கு ஏற்கனவே மாநிலத் திட்டக்குழுவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்தியாளர்: இப்ப பெரம்பலூர் பக்கம், குன்னம் தொகுதியில பாத்தீங்கன்னா ரொம்ப டிராஃபிக் ஹெவியா இருக்கு. நகரம் வளர்ந்துகிட்டே இருக்கு. இதப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது சுற்றுவட்டச் சாலைகள் அமைப்பீங்களா?
வேட்பாளர்: ஏற்கனவே குன்னம் நகரத்திற்கும், செந்துறை நகரத்திற்கும், லப்பைக்குடிக்காடு நகரத்திற்கும் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கு கோரிக்கை வைத்து, அதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அதற்கான சர்வே பணிகள் முடிவுற்றுவிட்டன. அடுத்த கட்டமாக அதற்கான நிதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
செய்தியாளர்: இப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த நேரத்துல கேஸ் ரொம்ப கடுமையான தட்டுப்பாடு. குறிப்பா வணிக பயன்பாட்டிற்கான கேஸே கிடைக்கல. ஆனா இப்ப அவங்க என்ன சொல்றாங்கன்னா எந்தவிதமான பதிவு பண்றப்ப சர்வரே ஒர்க் பண்ணலன்னு மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறாங்க. இது மோடி ஆப்-னு ஒரு ஆப் குடுத்திருக்காங்க. அந்த ஆப்-ல பண்ணா உடனே கிடைக்குதுங்கிறாங்க. இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
வேட்பாளர்: ஒன்றிய அரசினுடைய முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், முறையாக வெளிநாட்டுக் கொள்கைகளைக் கடைபிடிக்காத காரணத்தினாலும் இந்த ஒரு நெருக்கடி சூழல் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போர் ஏற்படும் என்பது நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு சீனா போன்ற நாடுகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டார்கள். ஆனால் இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருக்கிறவர் இந்த நேரத்தில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்து, அங்கே சண்டையில் இருக்கின்ற நாடுகளுக்கே பயணம் செய்து மற்றவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குகின்ற அளவிற்கு நடந்து கொண்ட காரணத்தினால் இந்த பாதிப்பு இருந்தாலும், ஈரான் நாடு இந்தியாவிற்கு ஏற்கனவே இருந்த நீண்ட கால நட்பின் அடிப்படையில் நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதை விரைவாகத் தீர்த்து வைக்க வேண்டிய கடமை பிரதமருக்கு இருக்கிறது. இந்த நேரத்திலும் அவர்கள் அரசியல் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்றைக்கு ஹோட்டல் தொழில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனைச் சரி செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவர்களுக்கான மின்கட்டணத்தில் சலுகை அளிப்பதற்கும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். அதே புதிய மின்சாரம் சார்ந்த அடுப்புகள் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் நம்முடைய முதலமைச்சர் திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலமாகச் சரி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு முனைந்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தன்னுடைய பங்கை முழுமையாகச் செய்யவில்லை.
செய்தியாளர்: இப்ப எடப்பாடி பழனிசாமி வந்து முன்னாள் முதல்வர் கலைஞரை வந்து ரொம்ப விமர்சனம் பண்ணிட்டு இருக்காரு, இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
வேட்பாளர்: எடப்பாடி பழனிசாமி தான் ஒரு முதலமைச்சராக இருந்தோம் என்பதையும் மறந்துவிட்டு, இன்னும் சொல்லப்போனால் மறைந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியை நடத்திக்கொண்டு, மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் வழிநடத்திய கட்சியை நடத்திக்கொண்டு, சிறிதும் அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். மக்கள் அவருக்கான புத்திமதியைத் தேர்தல் மூலம் வழங்குவார்கள் என தெரிவித்தார். இப்போது திமுக விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சுமார் 10 ஆயிரம் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் சிவசங்கரை வாழ்த்தினர்