பெரம்பலூர்: சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 11வது ஆண்டு விழா!

schedule
2026-01-31 | 10:58h
update
2026-01-31 | 10:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The 11th annual day celebration of Siruvachur Almighty Vidyalaya Public School!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 11வது ஆண்டு விழா அப்பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதல்வர் சாரதா ஆண்டறிக்கை வாசித்தார். பெரம்பலூர் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

Advertisement

துணை சேர்மன் சேர்மன் மோகனசுந்தரம், விஜய் டிவி புகழ் பெற்ற சாதனையாளர, பல குரல் மன்னன் விஜய், திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் விஜயகுமார், திருச்சி என். என். எஸ் சாரிடபிள் அறக்கட்டளை நிறுவனர் கணேஷ், பெரம்பலூர் நீதிமன்றத்தின் அரசு, துணை வழக்கறிஞர் கோவிந்தராஜ், அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், பள்ளியின் மேல்நிலை வகுப்புகளின் இயக்குனர் கார்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவிக்கப்படடனர். சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் வரவேற்பு நடனம், பரதம், நடனங்கள் ,நாடகம், என 20 க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதல்வர்கள் சந்திரோதயம், வித்யா, துணை முதல்வர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஹனிபா, கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுமதி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.01.2026 - 12:23:29
Privacy-Data & cookie usage: