பெரம்பலூர்: கடலூர் மாவட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

schedule
2025-12-25 | 15:14h
update
2025-12-25 | 15:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The bodies of those who died in the Cuddalore district accident have been sent to their native places.

கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே நடந்த வாகன விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார்

திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து கடலூர் மாவட்டம் எழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையை தாண்டி சென்று, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கார்களில் வந்த கார் ஓட்டுநர் மற்றும் சிறுவன் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 2 நபர்கள் உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் சென்னையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கச்செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.

அப்போது கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ்பசேரா ஆகியோர் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறந்தவர்களின் உடல்களை திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் என அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

XYLO CARல் வந்த டிரைவர் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் சீனுவாசபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் துரைராஜ் (35), திருச்சி காட்டூர் பர்மா காலனியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் உமர் பாரூக் (43) , இவரது மனைவி ரிபானா (38), உமர் பாரூக் மகள் தாஜ் பர்க்கா (10) மற்றும் புதுக்கோட்டை கலீப் நகரை சேர்ந்த சிராஜூதின் மகன் அகில் அகமது (3) சிராஜூதின் மனைவி குர்சிஸ் பேகம் (37) ஆறு பேரும், Innova Carல் வந்த கரூர், சின்னஆண்டான் கோயில் ரோடு சுப்பையா பிள்ளை லேஅவுட்டை சேர்ந்த ராஜரத்தினம் (67), இவரது மனைவி ராஜேஸ்வரி (57) மற்றும் காரின் டிரைவரான திருச்சி பீமா நகரை சேர்ந்த தனபால் மகன் ஜெயக்குமார் (30) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் : XYLO CAR ல் வந்த புதுக்கோட்டையை முகமது காசிம் (55) இவரது மனைவி ரமீஷா பேகம் (52), திருச்சி லால்குடியை சேர்ந்த சிராஜுன் மகன் அப்துல் அகத் (6) உமர் பாரூக் மகன் அப்துல் பத்தா (8) ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் இறந்துபோன துரைராஜ், உமர்பாரூக், ரிபானா, தாஜ் பர்க்கா ஆகியோரின் உடல்கள் திருச்சி மாவட்டத்திற்கும், குர்சிஸ் பேகம், அகில் அகமது ஆகியோரின் உடல்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், ராஜரத்தினம், ராஜேஸ்வரி, ஜெயக்குமார் ஆகியோரின் பிரேதங்கள் கரூர் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 02:59:49
Privacy-Data & cookie usage: