பெரம்பலூர்: லப்பைக்குடிக்காட்டில் ”மக்களுடன் முதல்வர்“ திட்டம்; கலெக்டர் கற்பகம் ஆய்வு!

schedule
2023-12-30 | 16:32h
update
2023-12-30 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “The Chief Minister with the People” project in Labbaikudikadu; Collector review!

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் லெப்பைக்குடிக்காடு, மெயின் ரோடு, கிழக்கு பள்ளிவாசல் மஹாலில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக இன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1,070 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த 26 நபர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு நபருக்கு ரூ.7,000 மதிப்புள்ள இருசக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது முறையாக ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பேரூராட்சித் தலைவர் ஜாஹிர் உசேன், உள்பட அரசு பணியாளர்கள், பொதுமகக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 20:34:37
Privacy-Data & cookie usage: