பெரம்பலூர்: ஏழ்மை நிலையில் உள்ள 3 பேருக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை வழங்கினார் கலெக்டர்!

schedule
2025-08-08 | 14:02h
update
2025-08-08 | 14:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The Collector donated 3 milch cows to 3 poor people for livelihood improvement!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான 3 கறவை மாடுகளை கலெக்டர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

Advertisement

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடமும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளிட்ட முகாமில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த 13 நபர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் பொருட்டு மனு அளித்த நபர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களா என ஆய்வு செய்து அவர்களுக்கு இலவச கறவை மாடுகளை வழங்கிட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டார்.

மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஏழ்மை நிலையில் உள்ள கீழ்கணவாய் கிராமத்தை சேர்ந்த கே.கார்த்திகேயன், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த ருக்மணி, டிகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கமலம் ஆகியோர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோசம்ரக்சனா டிரஸ்ட் மூலமாக பெறப்பட்ட 3 கறவை மாடுகளை 3 பயனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பகவத்சிங், துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மூக்கன், உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:41:25
Privacy-Data & cookie usage: