Perambalur: The Devendra Kula Vellalar community and the Christian Goodwill Movement extend their support to DMK candidate Jayalakshmi!
பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் நெ.அருண்குமார் ஏற்பாட்டில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயலெட்சுமிக்கு ஆதரவளித்தனர்!
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் நெ.அருண்குமார் ஏற்பாட்டில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த, தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வளரும் தமிழகம் மாவட்ட செயலாளர் செல்வன், தமிழ்நாடு தேவேந்திர குல பேரவை மாவட்ட செயலாளர் நித்தீஷ்குமார், தீபக் பாண்டி பேரவை மாவட்ட அமைப்பாளர் பிரவீன்ராஜ் ஆகியோரது தலைமையில் சுமார் 1000 பேர் தங்கள் சமுதாய ஆதரவை தி.மு.க.விற்கு அளித்து வேட்பாளர் ஜெயலெட்சுமியை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு பெற பாடுபடுவதாக கூறினார்கள். அப்போது வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அனைவரும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காடூர் கவியரசு, துணை அமைப்பாளர்கள் மதுபாலன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், நகர் மன்ற உறுப்பினர் ஜெயசித்ரா மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர்.ஜெயலட்சுமியை ஆதரித்து வாழ்த்துக்கள் வழங்கினர். இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆ_இராசா எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பா. ரிணோ பாஸ்டின், சட்ட மன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.