பெரம்பலூர் அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு

schedule
2016-03-31 | 06:46h
update
2026-06-22 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் எதிர் வீட்டுகாரர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 75), விவசாயியான இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை குடிநீர் பிடிப்பதில் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதியவர் அழகப்பன் குடும்பத்தாருக்கும், முருகன் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மனைவி சுசீலா, இவர்களது மகள் செல்வராணி, ஆகியோர் அழகப்பனையும், அவரது மகன் இளையபெருமாளையும் சரமாரியாக தாக்கி அறிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த முதியவர் அழகப்பன் மற்றும் இளையபெருமாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் தந்தை, மகன் அரிவாளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 16:54:13
Privacy-Data & cookie usage: