Perambalur: The District Administration will function transparently and in a manner easily accessible to the public—Collector Sharanya announces in an interview.
பெரம்பலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றுவதில் எனக்கு மிகவும் சந்தோஷம், பெருமையும் கூட. சோ, இந்த நல்வாய்ப்பை எனக்கு அளித்த தமிழக அரசு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ரொம்ப ஹார்ட் வொர்க்கிங் பீப்பிள் (hard working people), உழைக்கும் மக்கள். சோ, நம்மளோட பிக்கஸ்ட் ஸ்ட்ரென்த் (biggest strength), அதாவது நம்மளோட பெரிய பலமே நம்மகிட்ட இருக்கிற வாஸ்ட் ஸ்ட்ரெச் ஆஃப் லேண்ட் (vast stretch of land)-ன்னு தான் நான் நினைக்கிறேன். இல்லைங்களா?
சோ, இந்த நிலத்தை எப்படி வந்து தொழில்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பா இதை எப்படி மாற்றணும் அப்படிங்கிற அந்த நோக்கத்துல, இந்த அரசோட அத்தனை சஜஷன்ஸையும் (suggestions) ஃபாலோ பண்ணி இந்த மாவட்ட நிர்வாகம் அதை எடுத்துக்கொள்ளும். அதுதவிர, இதுக்கு முன்னாடி நான் இருந்த டிபார்ட்மென்ட்ஸ் (departments) பார்த்தீங்கன்னா எஜுகேஷன் டிபார்ட்மென்ட் (Education Department) பிளஸ் சோசியல் வெல்ஃபேர் டிபார்ட்மென்ட்ல (Social Welfare Department) இருந்திருக்கேன் ரீசண்டா (recently).
சோ, என்னோட முழு ஃபோகஸும் (focus) குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் இளைஞர்கள். சோ, இதுல என்னோட நாட்டம் இருக்கும்.
சோ, குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட சத்துணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம்… சோ, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, அவங்களுக்கு அவங்களோட உடல்நிலை… முதியோர் பொறுத்தவரைக்கும் மனநிலை… சோ, இந்த நோக்கத்துல நான் வந்து… இளைஞர்கள் பொறுத்தவரைக்கும் ஸ்போர்ட்ஸ் (sports), எஜுகேஷனல் ஆப்பர்சுனிட்டீஸ் (educational opportunities). நிறைய பேருக்கு சிவில் சர்வீஸ் எக்ஸாமினேஷன் (Civil Services Examination), டிஎன்பிஎஸ்சி எக்ஸாமினேஷன் (TNPSC Examination)- இந்த மாதிரி கவர்மெண்ட் எக்ஸாமினேஷன்ஸ்க்கான (government examinations) டிரைனிங், ஸ்கில் டிரைனிங் (skill training), அந்த மாதிரி ஃபோகஸ்ல இந்த மாவட்டம் நிர்வாகம் செயல்படும்.
சோ, நம்ம மாவட்டத்தைப் பொறுத்தவரை இது ஒரு வேளாண்மை சார்ந்த மாவட்டம்னு நான் கேள்விப்பட்டேன். சோ, அதனால நம்ம விவசாயிகளுக்கு இருக்கிற அத்தனை சிறுகுறு பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், வெளிப்படையாக இங்க வந்து பேசலாம். சோ, எங்க சார்பாக, இந்த மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், அதிகாரிகள் சார்பாகவும் அவங்களுக்கு என்ன மாதிரியான சஜஷன்ஸோ (suggestions) இல்ல ரெக்கமெண்டேஷன்ஸோ (recommendations) இருந்தா, அதை ஏற்று நடக்கக்கூடிய அந்த ஒரு வாய்ப்பை நாங்க கண்டிப்பா ஏற்படுத்தி தருவோம்.
அதுமட்டுமில்லாமல் என்னோட கவனத்துக்கு என்ன வந்ததுன்னா, கிரவுண்ட் வாட்டர் பிராப்ளம் (ground water problem) இங்க இருக்கு அப்படின்னு. நீர்நிலை ஒரு சவாலாக இருக்கிறது. அதுக்கு முழுவிதமான என்ன விதமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான என்ன சொல்யூஷன்ஸை (solutions) நம்ம ஆணி… ஆணியோட அதை வேர்க்கணும். சோ, அதுக்கான பிளானிங்கும் (planning) அதுக்கான இம்ப்ளிமெண்டேஷனும் (implementation) சோ, மாவட்டம் நிர்வாகம் சார்பாக நாங்க பண்ணுவோம்.
அதுமட்டுமில்லாம ஒரு மாவட்டத்தை வந்து முன்னிறுத்தி நடத்தணும் அப்படின்னா, அது அரசால் மட்டும் முடியாது. சோ, மக்கள், மக்கள் பிரதிநிதிகள், உங்கள மாதிரி ஜெர்னலிஸ்ட் (journalist), பிரிண்ட் மீடியா (print media), அப்புறம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் அனைவரும் சேர்ந்து இதுல வேலை பண்ணனும். அப்பதான் நம்மளுக்கு நினைக்கக்கூடிய அந்த அச்சீவ்மென்ட்ஸ் (achievements) வந்து சீக்கிரமாகவும் நடக்கும், முழுமையாகவும் நடக்கும்.
சோ, அதனால உங்களோட ஒத்துழைப்பும், உங்களோட சஜஷன்ஸும், ரெக்கமெண்டேஷன்ஸும் என்னைக்குமே வந்து எங்களுக்கு தேவைப்படும். So, we are always open to all kind of suggestions. என்னைப் பொறுத்தவரைக்கும், as a person, I believe in transparency. வெளிப்படைத்தன்மை எனக்கு ரொம்ப இயல்பா வருது. சோ, அதனால இந்த மாவட்ட நிர்வாகமும் வெளிப்படையாக, ஈஸியா (easy-ஆ) மக்கள் வந்து அணுகக்கூடிய முறையில செயல்படும்ங்கிற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் நான் மட்டுமில்லை, என்னைச் சார்ந்த அத்தனை அதிகாரிகளும் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை பார்க்கணும்ங்கிற அந்த நோக்கத்துலதான் நான் வந்திருக்கேன். சோ, இந்த மாவட்ட நிர்வாகமும் அதை நோக்கி செல்லும்ங்கிற நம்பிக்கையை உங்களுக்கு நான் தர்றேன் இன்னைக்கு.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள 9444175000 என்ற கலெக்டரின் எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், மீட்டிங்கில் இருந்தால் எடுக்க இயலாது என்றும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பில் அதனை பின்னர் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷரண்யா அறி 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வானையம் (UPSC) நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடமும் பெற்று 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்தடுக்கப் பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியராகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராகவும் , பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல துணை ஆணையராகவும் பணியாற்றினார். பின்னர், சமூக நலத்துறையில் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றிய ஷரண்யா அறி இன்று முதல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.