பெரம்பலூர்: மாவட்டத்தில் 12ம் வகுப்பில் 94.53 சதவீதம் தேர்ச்சி; 6 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் 23 வது இடத்திற்கு சென்றது!

schedule
2026-05-08 | 12:57h
update
2026-05-08 | 12:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The district records a 94.53% pass rate in the Class 12 examinations; 6 government schools achieve a 100% pass rate, propelling the district to the 23rd rank at the state level!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 3,742 மாணவர்களும், 3,464 மாணவிகளும் என மொத்தம் 7,206 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,470 மாணவர்கள் 3,342 மாணவிகள் என மொத்தம் 6,812 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.73 சதவீதமும், மாணவிகள் 96.48 சதவீதமும் பெற்று பெரம்பலூர் மாவட்டம் 94.53 சதவீதத்துடன் மாநில அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 8ம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரஞ்சன்குடிகோட்டை, நக்கசேலம், கவுள்பாளையம், எளம்பலூர், மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மாதிரிப்பள்ளி என 6 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தந்தை ஹேன்ஸ் ரோவர், புனித தோம்னிக் ஆகிய 2 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும், 18 சுயநிதிப் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கலெக்டர் மிருணாளினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் துணைத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2026 - 13:26:36
Privacy-Data & cookie usage: