பெரம்பலூர்: திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஓட்டு போடும் மெசின்களாக நடத்தி வருகின்றனர்; சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு!

schedule
2026-01-06 | 15:32h
update
2026-01-06 | 15:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The DMK government is giving false promises and treating the people like mere voting machines; alleges Sowmiya Anbumani!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் “சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்பு பயணம் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பாமக இணை பொதுச் செயலாளர் வைத்தி உழவர் பேர் இயக்க தலைவர் ஆலயமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:

Advertisement

திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்துமே கிடப்பில் போடப்படும் திட்டங்கள் மட்டும் தான். திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தராமல் டாஸ்மார்க் மதுபானங்களுக்கு மட்டுமே கிடங்குகளை அமைத்துள்ளனர். மேலும், சிறப்பு பொருளாதார மண்டலம். மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெரம்பலூர் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது என்றும், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து மூவாயிரத்தை கொடுத்து விட்டு அதனை மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை மூலம் திரும்ப பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இப்படி ஏழை எளிய மக்களை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு பொது மக்களை ஓட்டு போடும் மெசின்களாக நடத்தி வருகின்றனர் என்றும், டாஸ்மாக்கை ஒழித்திட ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மகளிர் உரிமை மீட்பு பயன நிகழ்ச்சியில் பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அமைப்பு நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, சவுமியா அன்புமணிக்கு மேளதாளத்துடன் வான வேடிக்கையுடன் மலர் தூவி பெண்கள் வரவேற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:30:13
Privacy-Data & cookie usage: