பெரம்பலூர்: திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்! அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

schedule
2026-02-02 | 19:45h
update
2026-02-02 | 19:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The DMK’s election manifesto reflects the sentiments of the people of Tamil Nadu! Minister Sivashankar’s interview!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் ரூ.12 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்,

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 13 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டும் பணி மற்றும் பெரிய வெண்மணி, புதுவேட்டக்குடி, காடுர், துங்கபுரம், வயலப்பாடி, கீழபெரம்பலூர், வசிஷ்டபுரம், கிழுமத்தூர், வேப்பூர், வரகூர், அந்தூர், குன்னம், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, அசூர், எழுமூர், சித்தளி, பேரளி ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் – கிராம ஊராட்சி பொதுநிதி, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, 15 வது நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மானியம், கனிமம் மற்றும் சுரங்கங்கள் நிதி, நம்ம ஊரு நம்ம அரசு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், தனிநபர் இல்ல குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், சாலைகள் பலப்படுத்தும் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்புப் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மோட்டார் மற்றும் பிற வேலைகள் வழங்குதல் பணி, புதிய ஆழ்துளை கிணறு நீர்மூழ்கி மோட்டார் மற்றும் குழாய்கள் அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள், பாலம் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள், நூலகம் அமைக்கும் பணி, தார் சாலை அமைக்கும் பணிகள், மயான கொட்டகை அமைக்கும் பணி,

Advertisement

சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிக்கு சுற்றுச்சுவர், சிலாப் மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கவர்சிலாப் அமைக்கும் பணி, கைபம்பு அமைக்கும் பணி, சாலை பராமரிப்பு பணிகள் என மொத்தம் ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் 86 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரிய வெண்மணி, துங்கபுரம், காரைப்பாடி, வேப்பூர், குன்னம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 பேருந்து நிழற்குடை மற்றும் புதுவேட்டக்குடி, காடுர், கீழ வீரமநல்லூர், வயலப்பாடி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியின் மூலம் தலா ரூ.9.15 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.66.60 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

இன்று ரூ.12 கோடி மதிப்புள்ள திட்டங்கள், மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. பல கிராமங்களில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கிராம சாலைகள் உள்ளிட்ட பணிகள் அடங்கும். அறிவிக்கபட்பட பட்ஜெட்டில் ஒட்டு மொத்த தமிழகத்தையே மோடி புறக்கணித்துள்ளார். தலைவர் குறிப்பிட்டது போல, தேர்தல் வரும் நேரத்திலாவது சில மாநிலங்களை குறிப்பிடடார்கள். இந்த தேர்தல் வரும் நேரத்தில் கூட எந்த அளவிற்கு வஞ்சமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. நம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு கூட மத்திய அரசிடம் காத்திருக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது.

தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு: திமுக தேர்தல் அறிக்கை பேசப்படும். திமுக தலைவர் கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பான வரவேற்பு இருக்கும். அதேபோல இந்த ஆண்டும் இருக்கும் தேர்தல் அறிக்கை மக்களுடைய உணர்வுகள் பிரதிபலிக்கும்.

மின் திருட்டுகள், ட்ரான்ஸ்பார்களில் கம்பிகள் திருடுவதையும் தடுக்கும் வகையில் தொடர் தீவிர நடவடிக்கை காவல், மின்துறையினர், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என மக்களை சந்திக்கின்ற என்னைப் போன்றவர்களுக்குதான் தெரியும். நான் காலையில் இருந்து இப்போது மணி மாலை 5 இதுவரை மக்களை சந்தித்து கொண்டு வருகிறேன். மக்களையே சந்திக்காமல் மக்களை பார்க்க எந்த இடத்திற்கும் போகாமல் தன் இருப்பிடத்திலேயே எல்லோரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாட்டு நடப்பு தெரியாது மக்கள் நிலவரம் தெரியாது இப்படி தான் பிதற்றுவார்கள் என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கலெக்டர் மிருணாளினி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன், முன்னாள் வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அழகுநீலமேகம், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.02.2026 - 20:27:50
Privacy-Data & cookie usage: