பெரம்பலூர்: புகழ் பெற்ற பூலாம்பாடி ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது; அமைச்சர் சிவசங்கர், பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

schedule
2025-04-13 | 10:01h
update
2025-04-13 | 10:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The famous Poolambadi Jallikattu will be held tomorrow; Minister Sivashankar and international businessman DATO S PRAKADEESH KUMAR and others will inaugurate it.

MODEL Photo

Advertisement

நாளை தமிழ் புத்தாண்டு தினத்தில், புகழ் பெற்ற பூலாம்பாடி ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவடங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும், பன்னாட்டு தொழிலதிபரும், பூலாம்பாடியின் அதிமுக்கிய பிரமுகருமான டத்தோ. எஸ். பிரகதீஸ்குமார் மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். பெரம்பலூர் கலெக்டர் கிரேஷ் பச்சாவ், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னிலையில் காளைகள் கட்டு அவிழ்த்து விடப்படுகிறது. அரசு விதிமுறைப்படி அனைத்து முன்னேற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்துள்ளனர். வருவாய் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல் துறையினர், ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக்குழுவினரும் காயமடைபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 04:42:44
Privacy-Data & cookie usage: