பெரம்பலூர்: வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கிய விவசாயி மின்சாரம் தாக்கி பலி!

schedule
2024-10-04 | 17:54h
update
2024-10-04 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The farmer who started the motor to water the field got electrocuted and died!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (48) விவசாயி. இன்று மாலை, அவரது சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், செல்வம் ஏற்கனவே இறந்து விட்டது தெரிவித்தனர்.

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவருக்கு கவிதா என்ற மனைவியும் இரு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 01:30:06
Privacy-Data & cookie usage: