பெரம்பலூர்: சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய தொடக்க விழா; நாளை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடக்கிறது!

schedule
2025-04-17 | 18:00h
update
2025-04-17 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The inaugural ceremony of the Saivasiddhanta Interview Training Center will be held tomorrow at Sri Ramakrishna Vidya Bhavan CBSE School!

பெரம்பலூரில் திருவாவடுதுறை ஆதீனம்சார்பில் சைவசித்தாந்த நேர்முகப்பயிற்சி மைய தொடக்க விழாவும், சைவசித்தாந்த பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு எளம்பலூர் சாலையில் பொதிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெறுகிறது.

விழாவிற்கு திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். விழாவில் பெரம்பலூர் சப்- கலெக்டர் கோகுல் சிறப்பு விருந்தினராகவும், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையங்களின் இயக்குனர் கந்தசுவாமி, ஸ்ரீராமகிருஷ்ணா -ஸ்ரீசாரதா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் சிவசுப்பிரமணியம் , பெரம்பலூர் மாவட்ட சைவ சித்தாந்த பண்பாட்டு மையத்தின் தலைவரும், எஸ்.ஆர்.எம்.மெடிக்கல் ஓனர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். சைவசித்தாந்த பேராசிரியர் சித்தாந்த வித்யாநிதி ரவீந்திரன், சைவசித்தாந்தம்குறித்து விளக்கிப் பேசுகிறார்.

Advertisement

விழா ஏற்பாடுகளை பயிற்சி வகுப்புகள் அமைப்பாளர் மலர்விழிசெல்வராஜ், ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட சைவசித்தாந்த பண்பாட்டு மையத்தின் செயலாளருமான மோகன், பிரம்மபுரீசுவரர் கோவில் வார வழிபாட்டுக் குழு பொறுப்பாளரும்,போலீஸ் சப் இன்ஸ்பெக்டருமான கலா லட்சுமணன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

நாளை தொடங்கி ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை தோறும் சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்தத்தில் ஆர்வமுள்ள சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுமாறு பெரம்பலூர் மாவட்ட சைவ சித்தாந்த பண்பாட்டு மையத்தின் தலைவர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 13:26:37
Privacy-Data & cookie usage: