பெரம்பலூர் அருகே தீக்குளித்த இளம்பெண் படுகாயம் : தீவிர சிகிச்சை

schedule
2016-11-24 | 17:03h
update
2026-06-25 | 00:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur The injured teenager was burning near: intensive care

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது20). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

Advertisement

வழக்கம்போல் இன்றும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுமித்ராஉடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சுமித்திரா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 00:35:24
Privacy-Data & cookie usage: