பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளையர்களை துரிதமாக பிடித்த போலீஸ் எஸ்.பிக்கு நகைக்கடை சங்கத்தினர் சால்வை அணிவித்து பாராட்டு!

schedule
2025-12-11 | 13:27h
update
2025-12-11 | 13:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The jewellers’ association felicitated the police SP with a shawl for swiftly apprehending the jewellery store robbers!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (67). இவர், அதே ஊரில், பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே நகைக் கடை நடத்தி வந்தார். கடந்த நவ.13 அன்று கடையில் 6 பேர் கொண்ட கும்பல், காவலாளியை கட்டி போட்டுவிட்டு கேஸ் கட்டரை வைத்து கடையில் கொள்ளையடிக்க முயன்றது. இது குறித்து கடையில் இருந்து செக்யூரிட்டி அலாரம் உரிமையாளரின் போனுக்கு அனுப்பி அலார்ட் சவுண்டால் அவர் உடனடியாக கடைக்கு சென்று பார்த்த போது சிலர் காரில் ஏறி தப்பி ஓடினர். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி துரிதமாக கொள்ளையர்களை 6 பேரையும் கூண்டோடு பிடித்து வந்து சிறையில் அடைத்தனர்.

துரிதமாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி பெரம்பலூர் அனைத்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கதத்தை சேர்ந்த தலைவர் ராஜசேகர், பொருளாளர் பவித்ரா செல்வராஜ், கொள்ளை முயற்சி நடந்த பாடாலூர் கடை உரிமையாளர் தமிழரசன், பிற கடை உரிமையாளர்கள், ராமர், சரவணன், சிவக்குமார் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா மற்றும் பாடாலூர் போலீசார், சைபர் க்ரைம், ஹைவே, தனிப்படை போலீசார்களை பாராட்டி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 02:46:56
Privacy-Data & cookie usage: