பெரம்பலூர்: குடும்ப ஆட்சி எனும் வியாதியை வேரோடு அழிக்க வேண்டும்; அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பிரச்சாரம்!

schedule
2026-04-07 | 17:38h
update
2026-04-07 | 17:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The malady of dynastic rule must be eradicated root and branch; IJK Founder Parivendhar campaigns in support of AIADMK candidate Elambai R. Tamilselvan!

தமிழ்நாட்டிலே ஒரு சுத்த தமிழன் இதுவரை ஆண்டார் என்றால் அவர் எடப்பாடியார் ஒருவர்தான். அந்த அணியிலிருந்து இவர் போட்டியிடுகிறார். அதுமட்டுமல்ல, வருகின்ற 23-ஆம் தேதியில் அண்ணா திமுகவை விரும்புகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக திமுகவை வெளியேற்றுவதற்காக அண்ணா திமுகவின் வெற்றியை உறுதி செய்யப்பட்ட ஒன்று.

நாம் அந்த நாளுக்காக எல்லாரும் காத்திருக்கிறோம். காரணம் உங்களுக்கு தெரியும், நீங்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு அத்தனை மக்களும் – ஏழையோ பணக்காரனோ, யாராக இருந்தாலும், இந்த தமிழ்நாட்டு செயல்பாடுகள் உங்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது. என்றைக்குப்பா இவர்களிடமிருந்து விடுபடுவோம் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

அது யார் கையில் இருக்கிறது?.. உங்கள் கையில் இருக்கிறது… உங்கள் விரலில் இருக்கிறது.. ஆகவே சரியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இப்போ குறள் படிச்சிருப்பீங்க எல்லாரும். குறள் படிச்சிருக்கீங்களா? ஸ்கூல்ல படிச்சிருப்பீங்க, காலேஜ்ல படிச்சிருப்பீங்க. அதுல பார்த்தீங்கன்னா ஒரு வரி வரும்:

Advertisement

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்’ திரும்பவும் சொல்றேன் கேளுங்க, திருக்குறளை விட ஒரு சிறந்த நூல் இந்த உலகத்தில் இல்லை.” ஒருவன் நடுவுநிலைமை உடையவன் அல்லது இல்லாதவன் என்பது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழைக் கொண்டோ அல்லது பழியைக் கொண்டோ அறியப்படும்.

ஊழலற்ற தமிழகம் படைப்போம்! வாக்குறுதிகள் என்ன ஆனது? தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. மகளிருக்கு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி, இன்று பெண்களை வட்டி கட்ட வைத்துள்ளனர். மாணவர்களின் கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. வீட்டு வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்தும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் இன்றி எந்த வேலையும் நடப்பதில்லை. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மட்டுமே நடக்கிறது (தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்). ஜனநாயகத்தைக் காக்க, இந்த “குடும்ப ஆட்சி” எனும் வியாதியை வேரோடு அழிக்க வேண்டும்.

திமுக அமைச்சர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து ஒரு குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் ஏஜென்ட்டுகளாகவும், கொத்தடிமைகளாகவும் செயல்படுகின்றனர். மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று பார்த்தால், அது ஊழல் மூலம் லண்டனுக்கு சென்று அங்கு ஒரு வங்கியையே வாங்கும் அளவிற்கு முதலீடு செய்யப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தமிழக மக்கள் எவ்வளவு வரி போட்டாலும், எவ்வளவு ஊழல் நடந்தாலும் தாங்கிக்கொள்வார்கள் என்ற ஒரு நிலை உருவாகிவிட்டது.

இந்தக் கொடுமையான ஆட்சியை அகற்றி, நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்புத் தம்பி இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெற்றி பெற்றால் அவர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது என வேட்பாளர் தமிழ்ச்செல்வனை வாழ்த்தினார்.

திமுகவினர் தங்களின் தேர்தல் அறிக்கையை (Manifesto) ஒரு ‘ஹீரோ’ போலச் சித்தரிக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றியது போலவே இப்போதும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். தற்போதைய அரசு சம்பளம் கொடுக்கக் கூடப் பணமில்லாமல் மக்களை ஏமாற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் வங்கிக் கணக்கிலும் ₹10,000 நேரடியாகச் செலுத்தப்படும் என அதிமுக உறுதி அளித்துள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக்கொள்வார்கள் என்று கூறினார். தேஜ கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் டி.என். சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 09:40:36
Privacy-Data & cookie usage: