பெரம்பலூர்; தீபாவளிக்கு சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

schedule
2023-11-14 | 13:43h
update
2026-09-01 | 23:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur; The man who went to Diwali broke the lock of the house and robbed the jewels and money!

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி செல்லம் (70). இவரது மகன் ரமேஷ். திருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார்.மற்றொரு மகன் சதீஸ் வெளிநாடு சென்றுள்ளார்.

Advertisement

செல்லத்தின் கணவர் பெருமாள் இறந்து சுமார் 2 வருடம் ஆகிறது. செல்லம் அடிக்கடி மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்று விடுவார். சொக்கநாதபுரத்தில் அவ்வப்போது வந்து ஒரு வாரம் தங்கி விட்டு செல்வார். கடந்த 20 நாளுக்கு முன்பு மகன் வீட்டிற்கு தீபாவளிக்காக திருச்சி சென்று விட்டார்.

இவரது வீட்டருகே உள்ள நல்லதம்பி மனைவி சர்மிளா என்பவர் லைட் போட சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த தாலி – 1/2 பவுன்,
மோதிரங்கள் 2பவுன், காசு 1/2 பவுன், ரொக்கம் ரூ.2000 என மொத்தம் : 3 பவுன் , 2000 பணம் களவு போய் இருப்பது தெரியவந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 23:09:11
Privacy-Data & cookie usage: