பெரம்பலூர்: 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் வழங்கினார்!

schedule
2026-07-11 | 14:54h
update
2026-07-11 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The Municipal Commissioner distributed awareness leaflets regarding the 8th census to the public!

8 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது குறித்து பெரம்பலூர் உழவர் சந்தையில், நகராட்சி ஆணையர் (பொ) கண்ணன் பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்த விழப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களை வழங்கினார்.

முதல் கட்ட பணியில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், 2ம் கட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஹெச் எல் ஓ என்ற செயலியின் வாயிலாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுயவிவரங்களை பதிவிடும் வகையில் சுயகணக்கெடுப்பு காலமாக ஜூலை 17 முதல் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை வீடு வீடாக நேரடியாக வந்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின் போது வீடுகளின் கூரை அமைப்பு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 34 கேள்விகளுடன் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வருகை புரிந்து செயலியின் வாயிலாக விவரங்களை சேகரிப்பார்கள்.

Advertisement

இப்பணியினை மேற்கொள்வதற்காக 916 கணக்கெடுப்பாளர்களும், 150 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியினை 30 நாட்களுக்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் மற்றும் லப்பைகுடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி செயல்அலுவலர்கள் அலுவலகங்களை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 17 முதல் ஜூலை 31 முடிய HLO செயலியினை பயன்படுத்தி தங்களது சுயவிவரங்களை அலைபேசி / கணினி வாயிலாக பதிவு செய்து கொள்ளுமாறும், அதன் பின்னர், ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 30 முடிய வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பும், கணக்கெடுப்பிற்கு தேவையான விவரங்களை பொதுமக்கள் வழங்க வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வட்டாட்சியர் பழனி செல்வன் உள்பட நகராட்சி, வருவாய் துறை அலூவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 15:29:28
Privacy-Data & cookie usage: