பெரம்பலூர்: கொத்தைடிமையாய் ஆடு மேய்த்து தப்பி சென்ற சிறுவர்களை காரில் கடத்தி வந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளர்; மீட்டுத்தர கலெக்டரிடம் தாய் மனு!

schedule
2025-12-02 | 16:10h
update
2025-12-02 | 16:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The owner of a sheep farm who kidnapped children who had run away from herding sheep in a car; the mother petitions the Collector to rescue the children!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூர், ராஜகணபதி நகரில் வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த சிறார்களான இருவர் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் எல்லையான சின்னாறு பகுதியில், ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் பால்ராஜ் என்பவரிடம் முன்பணமாக ரூபாய் 18.000 பெற்றுக்கொண்டு கொத்தடிமையாக வேலை செய்து வந்த நிலையில், பால்ராஜ் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

Advertisement

கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்களும் தப்பித்து கடலூர் மாவட்டம், தொழுதூரில் இருந்து காடாம்புலியூரில் வரை அவர்கள் வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டனர். இவர்களை தன் கூட்டாளிகள் மூவருடன் காடாம்புலியூர் தேடி வந்த பால்ராஜ் 2 சிறுவர்களையும் பிடித்து, அவர்களின் இரு கையையும், காலையும் கயிற்றால் கட்டி காருக்குள் ஏற்றி அவர்களை அடித்து கடத்தி சென்றுவிட்டதாக, தன் மகன்களை இருவரையும் மீட்க கோரியும், கொத்தடிமையாக வைத்து சித்தரவதை செய்து காரில் கடத்தி சென்ற ஆட்டு பண்ணை உரிமையாளர் பால்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறுவர்களின் அம்மா பூஞ்சோலை இன்று கடலூர் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமாரிடம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் சு. ஆறுமுகம். ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 19:23:12
Privacy-Data & cookie usage: