பெரம்பலூர்: வங்கிக்கு அடகு வைத்த நகையை மீட்க வந்த நபரிடம், ரூ. 6 லட்சம் பறித்து சென்ற கொள்ளையர்கள்!

schedule
2024-07-03 | 14:59h
update
2024-07-03 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The person who came to recover the jewelery pledged to the bank, was asked to pay Rs. Robbers who took away 6 lakhs!

பெரம்பலூர் துறைமங்கலம் அரசு பஸ் டெப்போ அருகில் இயங்கி வரும் வங்கியின் வாசலில், வாலிகண்டபுரத்தை ஹோட்டல் அதிபரிடம், கொள்ளையர்கள் அவரை எட்டி உதைத்து, அவரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்து கொண்டு தப்பித்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

Advertisement

அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக சுமார் இன்று மாலை 3.45 மணிக்கு ரூ. 6 லட்சத்துடன் பேங்கினுள் சென்று நகையை மீட்க கேட்டபோது இன்று நேரம் முடிந்து விட்டது நாளை வாருங்கள் என்று கூறி வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பையில் ரூ.6.00.000, மற்றும் செல்போனை வைத்து வெளியே எடுத்தவர், அவரது பைக் டேங்க் கவரில் வைக்க சென்றபோது , அங்கு வேகமாக வந்த இரு மர்ம நபர்கள் சுரேஷை எட்டி உதைத்து விட்டு கையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் உடன் கூடிய பையை பறித்து சென்று விட்டனர். இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்வம் இன்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 07:16:58
Privacy-Data & cookie usage: