பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர் தவறவிட்ட டிராவல் பேக்கை ஒப்படைத்த போலீசார்

schedule
2024-02-12 | 15:39h
update
2024-02-12 | 15:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The police handed over the missing travel bag of the person returning from abroad

புதுக்கோட்டை மாவட்டம் சுல்லனி கிராமத்தைச் சேர்ந்த முருகையன் இன்று சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தார். அங்கிருந்து, திருச்சி செல்லும் அரசு பேருந்தில் பயணித்த போது அவருடைய டிராவல் பேக் வரும் வழியில் எங்கோ தவறி விழுந்துவிட்டது என திருச்சி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணி புரியும் எஸ்.எஸ்.ஐ மருதமுத்து இன்று காலை 7 மணிக்கு ஆலத்தூர் கருவூல பணி முடித்துவிட்டு வரும்போது டிராவல் பேக் ஒன்று காரை பிரிவு ரோட்டில் தவறி கீழே விழுந்தை கண்டு அதனை பாடாலூர் போலீசாருக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-II மூலம் ஒப்படைத்தார்.

பின்னர் பாடாலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் டிரைவர் நந்தக்குமார் கண்டக்டர் கருணாகரன் முன்னிலையில் பயணி முருகையனிடம் ஒப்படைத்தனர். எஸ்.எஸ்.ஐ மருதமுத்துவை சக போலீசார் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 18:17:23
Privacy-Data & cookie usage: